கணவர் முன்னே மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - பகீர் சம்பவம்!

Sexual harassment India Crime
By Sumathi 2 மாதங்கள் முன்

கணவர் முன்னே மனைவிக்கு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறு

ஜார்கண்ட், பலாமு மாவட்டத்தில் உள்ள சத்பாவ்ரா பகுதிரைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி, கணவர் வீட்டாருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண் தனது தாய் வீட்டிற்கு கிளம்பி சென்றுள்ளார்.

கணவர் முன்னே மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - பகீர் சம்பவம்! | Six Members Gangrape Woman In Front Of Her Husband

இந்நிலையில், மனைவியை காணவில்லை என்பதால், அவரது கணவரும், உறவினரும் இரவில் அருகே உள்ள நெடுஞ்சாலைப் பகுதியில் வண்டியில் தேடிச் சென்றுள்ளனர். அப்போது சாலையில், மனைவி நடந்து சென்று கொண்டிருந்தார்.

 கூட்டு பாலியல் வன்கொடுமை

உடனே அவரை மறித்து சமாதானம் செய்துள்ளனர். அப்போது அந்த இடத்திற்கு ஆறு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து, கணவர் மற்றும் அவரது உறவினரை கடுமையாக தாக்கியுள்ளனர். கணவர் நிலைகுலைந்து விழுந்த நிலையில்,

கணவர் முன்னே மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - பகீர் சம்பவம்! | Six Members Gangrape Woman In Front Of Her Husband

தொடர்ந்து அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மீண்டும் பெண்ணை பைக்கில் ஏற்றி வேறு இடத்திற்கு கடத்தி செல்ல முயற்சித்துள்ளனர். அதனையடுத்து, அந்தப் பெண் காப்பாற்றுமாறு கூச்சலிடத் தொடங்கிய நிலையில்,

அதிர்ச்சி சம்பவம்

அருகேயுள்ள கிராமத்தினர் பெண்ணை மீட்டு, இரு குற்றவாளிகளை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய நான்கு பேரை காவல்துறை தேடி வருகிறது.

குற்றச் செயலில் ஈடுபட்டவர்களில் இருவர் தனக்கு அறிமுகமானவர் என பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.