குடும்ப தகராறில் 6 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்..

Attempted Murder
By Petchi Avudaiappan May 31, 2022 02:43 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மகாராஷ்ட்ராவில் குடும்ப தகராறில் குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்திலுள்ள காரவலி கிராமத்தில் 30 வயதான பெண் ஒருவர் அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்டனர். ஆனால் அதற்குள் நீரில் மூழ்கிய குழந்தைகள் அனைவரும் பரிதாபமாக இறந்தனர். 

உயிரிழந்தவர்கள் 10 வயதுக்குட்பட்ட 5 பெண் குழந்தையும், ஒன்றரை வயது ஆன பச்சிளம் குழந்தையும் ஆகும். இப்படி கொடூர செயலை செய்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் குடும்ப தகராறின்போது தன்னை கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும், இதனால் வெறுப்பின் உச்சத்தில் பெற்ற குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.