குளிக்க சென்ற ஆறு பேர் அடுத்தடுத்து மரணம்!
பீகாரில் தண்ணீர் நிரம்பிய குழிக்குள் குளிக்கச் சென்ற 5 சிறுமிகள் உட்பட ஆறு பேர் மரணமடைந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பீகாரின் Lohargava கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தயாராகினர்.
முந்தைய நாளில் தண்ணீர் தேங்கியிருந்த குழிக்குள் இறங்கி குளிக்க முயன்றுள்ளனர்.
முதல் நபர் இறங்கவும் வழுக்கி கொண்டு செல்ல மூழ்கத்தொடங்கியுள்ளார், அடுத்தடுத்த நபர்கள் காப்பாற்ற முயன்ற போது அவர்களும் தண்ணீரில் மூழ்கினர்.
விவரம் அறிந்து விரைந்த வந்த அதிகாரிகள் சிறுவர்களின் சடலத்தை மீட்டனர்.

விசாரணையில், இறந்தவர்கள் தீக்ஷா குமாரி (12), சோனாக்ஷி குமாரி (9), பிரியா குமாரி (7), ஆரயாத்யா குமாரி (11), சோட்டி குமாரி (8), மற்றும் குமார் (11) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிராமவாசிகள் அளித்த தகவலின்படி, சிறுமிகளில் ஒருவர் குளிக்க குழிக்குள் நுழைந்தபோது, அவர் வழுக்கி மூழ்கத் தொடங்கினார், மேலும் அவரைக் காப்பாற்றும் முயற்சியில், மற்றவர்களும் தண்ணீரில் குதித்து மூழ்கிவிட்டனர் என கேசரியா காவல் நிலையத்தின் நிலைய அதிகாரி ராகுல் குமார் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் ஆறு சிறுவர்களின் மரணத்தால் ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.