உயிருக்கு போராடும் நடன இயக்குனர் - தேடி வந்து உதவிய நடிகர் சோனு சூட்: ரசிகர்கள் நெகிழ்ச்சி

Sonu Sood K. Sivasankar
By Anupriyamkumaresan Nov 26, 2021 07:52 AM GMT
Report

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பிரபல நடன இயக்குனர் சிவசங்கருக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

பிரபல நடன இயக்குனராக இருப்பவர் சிவசங்கர் மாஸ்டர். தமிழில் தனுஷின் ‘திருடா திருடி’ படத்தில் இடம்பெற்ற மன்மதா ராசா பாடலின் மூலம் புகழ்பெற்ற இவர், சுமார் 800 படங்களுக்கு மேல் நடனம் அமைத்து கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவின் பலமொழி படங்களில் பணியாற்றியுள்ள இவர், சமீபகாலமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிருக்கு போராடும் நடன இயக்குனர் - தேடி வந்து உதவிய நடிகர் சோனு சூட்: ரசிகர்கள் நெகிழ்ச்சி | Sivashankar In Hospital Actor Sonusood Go And Help

தற்போது உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவசங்கர் மாஸ்டர் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்க அதிகளவில் பணம் தேவைப்படுகிறது. அதனால் சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க உதவி செய்யும்படி குடும்பத்தினர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த செய்தியை கேள்விப்பட்ட பாலிவுட் நடிகர் சோனு சூட், தானாக முன்வந்து உதவி செய்வதாக உறுதியளித்துள்ளார். அதோடு சிவசங்கர் மாஸ்டர் உடல்நிலை குறித்து குடும்பத்தினருடன் பேசி வருவதாகவும் சோனு சூட் தெரிவித்துள்ளார்.