சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு!
பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.
இதனால் உடனடியாக அவர் செங்கல்பட்டிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.