சிவசங்கர் பாபாவின் மின்னஞ்சல் முடக்கம்! ஆபாச பேச்சுக்கான ஆதாரம் சிக்கியது!
case
sivashankar baba
email blocked
By Anupriyamkumaresan
சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மின்னஞ்சல் முகவரியை சிபிசிஐடி போலீசார் முடக்கியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள புத்துப்பாக்கம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கரை பாலியல் புகாரில் கைது செய்த சிபிசிஐடி போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மின்னஞ்சல் முகவரியை சிபிசிஐடி போலீசார் முடக்கியுள்ளனர்.
இ-மெயில் கணக்கில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதற்கான ஆதாரமும், மேலும் மாணவிகளிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதற்கான ஆதாரமும் சிக்கியுள்ளது.