தையல் மிஷினும் தர்றேன் ..மேல் படிப்புக்கு உதவியும் செய்கிறேன் : நெகிழ்ச்சியடைய வைத்த அமைச்சர்!

minister tamilnadu viralvideo sivasankar
By Irumporai Jun 05, 2021 12:02 PM GMT
Report

தையல் மிஷின் கேட்ட பெண்ணிடம் படிப்பின் அவசியத்தை உணர்த்தி மேற்படிப்புக்கு தான் உதவி செய்வதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதியளிக்கும்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது திமுக .

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன்   பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில்  தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஒரு இளம்பெண்ணு.க்கு கொடுத்த வாக்குறுதியைதான் இணைய வாசிகள் பாராட்டி வருகின்றனர்.

குன்னம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக உள்ள சிவ ச தொகுதி பணியில் ஈடுபட்டிருந்த அமைசங்கரிடம்:  12-ம் வகுப்பு வரை படித்துள்ளேன் தையல் மிஷின் தாங்க என்று நரிகுறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உதவிக் கேட்டுள்ளார்.

அதற்கு அந்தப் பெண்ணிடம்  அமைச்சர்:  காலம் முழுவதும் தையல் மிஷினே வாழ்க்கையாகிடும்.

தையல் மிஷினும் தர்றேன், மேல் படிப்புக்கு உதவியும் செய்கிறேன். நல்லா படிச்சு நாலு பேருக்கு முன் மாதிரியாக இரு என கூறியுள்ளார்.


இந்த வீடியோ பதிவை தான் இணைய வாசிகள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.