சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறப்பு - உள்ளே என்ன இருந்தது? போலீசார் அதிர்ச்சி
செங்கல்பட்டு அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது.
சென்னை அருகே சுஷில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா என்பவர் மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் அளித்ததை அடுத்து சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சர்வதேச பள்ளியில் ரகசிய அறை ஒன்று இருப்பதாக சமீபத்தில் சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்தனர். இதை அடுத்து அந்த அறையை திறந்து சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபா வின் கைரேகை பதிவை எடுத்து இன்று சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
சிபிசிஐடி போலீசார் அந்த ரகசிய அறையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கு உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது