மேலும் 3-வது போக்சோ வழக்கு - சிவசங்கர் பாபா ஆஜர்!!
அடுத்து என்ன நடக்கும்? தண்டனையா? செங்கல்பட்டு சுஷீல் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம், சிவசங்கர் பாபா மீது மேலும் 1 பாலியல் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இதில் சிவசங்கர் பாபா சுற்றுலா அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்குகளை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவசங்கர் பாபாவை கைது சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கை போக்சோ பிரிவின் கீழ் மாற்றுவது தொடர்பாக இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.