சிவசங்கர் பாபா ஜாமீன் மனு தள்ளுபடி

court sivasankar baba abuse case petition dismissed
By Anupriyamkumaresan Aug 17, 2021 06:15 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

சிவசங்கர் பாபா மீதான இரண்டு போக்சோ வழக்கில் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுசில் ஹரி பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட 3 போக்சோ வழக்குகளில், சிவசங்கர் பாபாவை கடந்த ஜூன் 16 ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு தள்ளுபடி | Sivasankar Baba Petition Dismissed In Court

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்ததாக நடன ஆசிரியை சுஷ்மிதாவையும் ஜூன் 18ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிவசங்கர் பாபா ரகசிய அறைக்கு அழைத்து சென்று பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

சிவசங்கர் பாபாவின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியர்களான தீபா உட்பட 4 ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரணையும் நடத்தினர். மற்றொரு ஆசிரியரான பாரதி வெளிநாட்டில் இருப்பதால் சிபிசிஐடி தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 40 சாட்சியங்களின் அடிப்படையில் 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு தள்ளுபடி | Sivasankar Baba Petition Dismissed In Court

இவரின் ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி தண்டாயுதபாணி சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.