சிவசங்கர் பாபாவின் கைரேகை பதிவை வைத்து ரகசிய அறையை திறக்க திட்டம்
தொடர்ந்து 5 வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் கைரேகைப் பதிவை வைத்து, அவருடைய ரகசிய அறையை திறந்து, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர்பாபா ஏற்கனவே 4 போக்சோ வழக்கிலும், ஒரு பெண் வன்கொடுமை வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.
கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள, சுஷில் ஹரி உறைவிட பள்ளியின் நிறுவனரான சிவசங்கர், தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரால் பாதிக்கப்பட்டதாக மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில், சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இதையடுத்து, இதுவரை திறக்கப்படாமல் இருந்த சிவசங்கர் பாபாவின் கைரேகை பதிவு இருந்தால் மட்டுமே திறக்கக்கூடிய வகையிலான, உறைவிட பள்ளியில் உள்ள அறையை இன்னும் ஓரிரு நாளில் திறந்து, ஆவணங்களை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக, சிபிசிஐடி போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்