பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா தப்பியோட்டம் - சிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை!
டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா திடீரென தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பள்ளி மாணவிகள் பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். விசாரணக்கு ஒத்துழைக்காததால் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேற்று டேராடூன் விரைந்தனர். அப்போது தான் சிவசங்கர் பாபா தப்பியோடியுள்ளார். சிவசங்கர் பாபா, வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் தப்பியோட்டம். பள்ளி மாணவிகள் பாலியல் புகாரில் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.