பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பல முன்னாள் மாணவர்கள் பகிரங்கமான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. ராஜகோபாலன் இடைநீக்கம் செய்யப்பட்டதோடு அவரைக் கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
பிஎஸ்பிபி விவகாரத்தை தொடர்ந்து பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளும் பாலியல் புகாரில் சிக்கியுள்ளன. அவ்வாறு சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளி உரிமையாளர் சிவசங்கர் பாபா மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது பள்ளி நிர்வாகம் பல முன்னாள் மாணவர்கள் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிவசங்கர் பாபா விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. பள்ளி நிர்வாகிகள் மட்டும் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர்.