நள்ளிரவில் சிவசங்கர் பாபா போன் செய்தவுடன் மாணவியை குளிப்பாட்டி அறைக்கு அழைத்து செல்லும் வார்டன்!

case sivasankar baba
By Anupriyamkumaresan Jun 23, 2021 08:25 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

சிவசங்கர் பாபாவின் சில்மிஷ லீலைகளுக்கு மாணவிகளை அழைத்து செல்ல உடந்தையாக இருந்தவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

நள்ளிரவில் சிவசங்கர் பாபா போன் செய்தவுடன் மாணவியை குளிப்பாட்டி அறைக்கு அழைத்து செல்லும் வார்டன்! | Sivasankar Baba Dial Warden Call Girls And Go

அதனை தொடர்ந்து டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் போலி சாமியார் சிவசங்கர் பாபாவை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிவசங்கர் பாபாராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் நோக்கில் சுஷில் ஹரி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் சிவசங்கர் பாபா போன் செய்தவுடன் மாணவியை குளிப்பாட்டி அறைக்கு அழைத்து செல்லும் வார்டன்! | Sivasankar Baba Dial Warden Call Girls And Go

முன்னதாக இந்த வழக்கில் சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியைகள் பாரதி, தீபா மற்றும் சிவசங்கரின் சிஷ்யை சுஷ்மிதா ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சுஷ்மிதா என்ற பெண் இதே பள்ளியில் படித்து பின்னர் சிவசங்கரின் சிஷ்யையாக இருந்து வந்துள்ளார்.

இவரது படிப்பு செலவு முதல் திருமணம் செலவு வரை சிவசங்கரே ஏற்றுள்ளார். சிவசங்கர் பாபாவிடம் மாணவிகள் எப்படி நடந்த்துக்கொள்ள வேண்டும், அவருக்கு எவ்வாறு பணிவிடை செய்ய வேண்டும் மற்றும் இச்சைக்கு இணங்கும் நடவடிக்கைகளை சுஷ்மிதாதான் பயிற்சி கொடுத்து வந்தாராம்.

இவரையடுத்து, ஹாஸ்டல் வார்டானான நீரஜா மீதும் மாணவிகள் குற்றசாட்டு வைத்துள்ளனர். பாபாவுக்கு பகல், இரவு என அவர் விரும்பும் நேரங்களில் மாணவிகளை சப்ளை செய்ய வேண்டும்.

நள்ளிரவில் சிவசங்கர் பாபா போன் செய்தவுடன் மாணவியை குளிப்பாட்டி அறைக்கு அழைத்து செல்லும் வார்டன்! | Sivasankar Baba Dial Warden Call Girls And Go

இரவு நேரத்தில் சிவசங்கர் பாபா நேரடியாக நீரஜாவை தொடர்பு கொண்டு மாணவியை அழைத்து வர சொல்வாராம். அதன்படி அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும் மாணவியை எழுப்பி குளிக்க செய்து பாபாவின் அறைக்கு மாணவியை நீரஜா அழைத்து செல்வாராம்.

இப்படி பல நேரங்களில் மாணவிகளை சிவசங்கர் பாபா சீரழித்துள்ளார் என மாணவர்கள் வட்டாரத்தில் கூறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.