சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு - மாணவிகளிடம் ரகசிய விசாரணை..!

Tamil nadu
By Thahir May 20, 2022 09:03 AM GMT
Report

சிவசங்கர் பாபாவின் முன்னாள் பள்ளி மாணவிகள் 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவசங்கர் பாபாவிற்கு சொந்தமான கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு - மாணவிகளிடம் ரகசிய விசாரணை..! | Sivasankar Baba Case Secret Interrogation Students

இதையடுத்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த ஆண்டு ஜுன் மாதம் 16 ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இதில் 7 போக்சோ வழக்குகள் மற்றும் ஒரு பெண் வன் கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவை அடங்கும்.

இந்த வழக்கு தொடர்பாக 300 பக்க குற்றப்பத்திரிகை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களை அனுகி அவருக்கு எதிராக உள்ள எட்டு வழக்கிலும் ஜாமீன் பெற்றார்.

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு - மாணவிகளிடம் ரகசிய விசாரணை..! | Sivasankar Baba Case Secret Interrogation Students

இரண்டு வாரங்களுக்கு முன்பு விசாரணைக்காக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.

சிவசங்கர் பாபா மீது 8 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர்.