சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!! மொத்தம் 3 போக்சோ வழக்கு பதிவு!!
கேளம்பாக்கம் சுஷீல் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம், சிவசங்கர் பாபா மீது மேலும் 1 பாலியல் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இதில் சிவசங்கர் பாபா சுற்றுலா அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கை போக்சோ பிரிவின் கீழ் மாற்றுவது தொடர்பாக இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதை விசாரித்த நீதிபதிகள் சிவசங்கர் பாபா மீது 3வது போக்சோ வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர். மேலும் 2வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவை தொடர்ந்து சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்க
நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.