மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்று பாலியல் தொல்லை - சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு அதிர்ச்சி புகார்!
செங்கல்பட்டு சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாக அப்பள்ளி மாணவிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபாவை டெல்லியில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஏற்கனவே புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்ததாக மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது.
இதனால் 2-வது போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா நாளை அல்லது நாளை மறுநாள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.