பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா அதிரடியாக கைது - தண்டனை கிடைக்குமா?

case arrest abuse sivasankar baba
By Anupriyamkumaresan Jun 16, 2021 06:20 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அரசியல்
Report

சென்னையில் பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா காசிபாத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா திடீரென இன்று காலை தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். விசாரணக்கு ஒத்துழைக்காததால் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா அதிரடியாக கைது - தண்டனை கிடைக்குமா? | Sivasankar Baba Abused Case Arrest

இந்த நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேற்று டேராடூன் விரைந்தனர். அப்போது தான் சிவசங்கர் பாபா தப்பியோடியுள்ளார். சிவசங்கர் பாபா, வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் தப்பியோடினார்.

இந்த நிலையில் தற்போது சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் காசிபாத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.