நள்ளிரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா - குற்றவாளி போல் வரவில்லையாம்! இதோ புகைப்படங்கள்!
பள்ளி மாணவிகளின் பாலியம் புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா நள்ளிரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா, டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நள்ளிரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர். ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.
இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே போலீசார் டேராடூன் விரைந்த நிலையில், சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
ஆனால், நேற்று காலை டெல்லியில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் மடக்கி பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.
அவரை அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து நள்ளிரவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவரை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.