ஹீரோயினாக களமிறங்கும் பிரபல நடிகையின் மகள் - யாரென்று தெரிகிறதா?

Actresssivaranjani medha
By Petchi Avudaiappan Aug 31, 2021 01:10 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in வதந்திகள்
Report

தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்த பிரபல நடிகையின் வாரிசு ஒருவர் ஹீரோயினாக களமிறங்க உள்ளார்.

1990 ஆம் ஆண்டு ஹிருதய சாரம்ராஜ்யா கன்னடப் படத்தில் அறிமுகமான நடிகை சிவரஞ்சனி அதே ஆண்டில் வெளியான மிஸ்டர் கார்த்திக் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

1992 ஆம் ஆண்டு வெளியான தலைவாசல் படம் அவரை தமிழக மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைய செய்தது. இதனைத் தொடர்ந்து மலின் கலைஞன், விஜயகாந்தின் ராஜதுரை, பிரபுவின் சின்ன மாப்ள உள்பட இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சிவரஞ்சனி தெலுங்கு நடிகர் மேகா ஸ்ரீகாந்தை 1997 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

அவருக்கு இரு மகன்களும் மேதா என்ற மகளும் உள்ள நிலையில், தற்போது மேதா ஹீரோயினாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கதை, இயக்குனர், ஹீரோ ஆகியோரை சிவரஞ்சனி தேடி வருவதாகவும், விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேதா ஏற்கனவே ருத்ரமாதேவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.