சிவகாசி அருகே மீண்டும் பட்டாசு ஆலையில் மீண்டும் ஒரு விபத்து

body human bomb injury
By Jon Feb 13, 2021 05:43 PM GMT
Report

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏறபடுத்தியது இந்த நிலையில் கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான கே.ஆர்.பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 70க்கும் மேற்பட்டோர் இன்று காலை பணியாற்றி கொண்டிருந்துள்ளனர்.

வெடிமருந்து கலவைகளை உள்ளே எடுத்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக ம தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில் சுரேஷ் என்பவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார்.

விபத்தில் பட்டாசு ஆலையின் ? உள்ளே யாரும் சிக்கியிருக்கிறார்களா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.