டீனுக்குதான் பாடம் எடுத்தா நீதான் பா டான்னு : வைரலாகும் “ஜலபுல ஜங்” வீடியோ
டான் திரைப்பட்டத்தில் இடம் பெற்ற ஜலபுல ஜங் வீடியோ பாடலுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். படத்திற்கான டிரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
Here's the exclusive video promo of #Jalabulajangu, just for you! ?
— Sony Music South (@SonyMusicSouth) May 12, 2022
➡️ https://t.co/wBwtijq3fm
Jolly mela maja aayegaa! ??@anirudhofficial @Siva_Kartikeyan @KalaiArasu_ @Udhaystalin @LycaProductions @RedGiantMovies_ @Dir_Cibi @priyankaamohan @SKProdOffl#DON #DONfromMay13 pic.twitter.com/OAkTRcgnoj
இந்த நிலையில், இந்த படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்தில் இடம்பெற்ற ஜலபுல ஜங் வீடியோ பாடலுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிவகார்த்திகேயன் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விரைவில் முழு பாடல் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.