ஓடிடியில் வெளியாகும் டாக்டர்! அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்!

doctor movie sivakarthikeyan
By Anupriyamkumaresan Jun 29, 2021 08:42 AM GMT
Report

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓடிடியில் வெளியாகும் டாக்டர்! அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்! | Sivakarthikeyans Doctor Film Ott Release Fans Sad

கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் திரையரங்கு திறப்பை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் திரைப்படங்கள் ரிலீஸ் தேதியை அறிவிக்க தயாராக உள்ளன.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கியுள்ள திரைப்படம் ‘டாக்டர். இந்த படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரியங்கா மோகன். இவர்களுடன் யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது.

ஓடிடியில் வெளியாகும் டாக்டர்! அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்! | Sivakarthikeyans Doctor Film Ott Release Fans Sad

`டாக்டர்' திரைப்படம் முதலில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வேலைகள் நடைபெற்று வந்ததால் பட வெளியீட்டை ஒத்தி வைத்தனர் படக்குழுவினர். அதனை தொடர்ந்து மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டனர் படக்குழுவினர்.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்க துவங்கியதால் டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கபட்ட இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் பரவியது. இதனை மறுத்த டாக்டர் படக்குழுவினர், படம் நிச்சயமாக திரையரங்கில் தான் வெளியாகும் என உறுதியளித்தனர்.

ஓடிடியில் வெளியாகும் டாக்டர்! அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்! | Sivakarthikeyans Doctor Film Ott Release Fans Sad

இந்நிலையில் படம் தயாராகி ஓராண்டுக்கும் மேலாக படம் வெளியாகாமல் இருப்பதால் தயாரிப்பாளர்கள் கடுமையான நிதி நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறார்கள். அதனால் டாக்டர் திரைப்படம் விரைவில் ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பல நாட்களாக திரையரங்கில் தான் வெளிவரும் என எதிர்பார்த்து காத்துகொண்டிருந்த இந்த திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பை கேட்டதும் ரசிகர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.