‘இந்திய தேசத்திலயே தவிர்க்க முடியாத நடிகனா வந்து நிப்ப டா நீ’ - சிவகார்த்திகேயனை புகழ்ந்த பிரபல நடிகர்
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளன. அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன், அனிருத் காம்போவில் இதுவரை வெளியாகியுள்ள பாடல்கள் அனைத்தும் வழக்கம்போல் ஹிட் அடித்துள்ளன.

படம் மே 13-ம் தேதி வெளியாகவுள்ளதால், படத்துக்கான விளம்பரப் பணிகளில் படக் குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற பட வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியில் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய சமுத்ரகனி ” என்னை பார்ப்பது போல தான் சிவகார்த்திகேயனை பார்க்கிறேன். ஒவ்வொரு முறை சிவாவை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருக்கு.

நான் பட்ட வலிகள், நான் கடந்து வந்த பாதை இதை அவன் எவ்வளவு பட்டிருப்பார் எந்தெந்த பக்கத்தில் வாங்கியிருப்பான் அப்படின்னு.. சிவா டான் படம் மிகப்பெரிய வெற்றியடையும். நம் தேசம் மட்டுமல்ல, இந்திய தேசத்திலேயே தவிர்க்க முடியாத நடிகனாக வந்து நிப்ப. இறைவனை பிராத்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Tamizha Tamizha: ஹனிமூன் சென்ற இடத்தில் பெண்ணிற்கு நடந்த துயரம்! பதில் பேச முடியாமல் தொகுப்பாளர் Manithan
நாமலின் பிரத்தியேக செயலாளரின் வீட்டில் இரவிரவாக நடந்த சோதனை! மீட்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டி IBC Tamil