தியேட்டரில் ரசிகர்களுடன் இணைந்து Vibe செய்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் வீடியோ...!

Sivakarthikeyan Viral Video Prince (2022)
By Nandhini Oct 21, 2022 08:25 AM GMT
Report

தியேட்டரில் ரசிகர்களுடன் இணைந்து Vibe செய்த சிவகார்த்திகேயன் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ‘டான்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து படத்தைத் தயாரித்தது. பாக்ஸ் ஆபிசிலும் வசூலை வாரி அள்ளியது.

Vibe செய்த சிவகார்த்திகேயன்

இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கும், சிவகார்த்திகேயன் புரொமோஷன் செய்துள்ளார். இப்படத்திற்கு அனுதீப் இயக்கியுள்ளார். வெளிநாட்டு நடிகை மரியா இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் சேர்ந்து ‘பிரின்ஸ்’ படத்தை பார்த்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர். அப்போது, ரசிகர்களுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் Vibe செய்து நடனமாடினார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.   

sivakarthikeyan-viral-video