இணையத்தை கலக்கும் நடிகர்கள் சிவகார்த்திகேயன்,சூரி பைக் ரைட் போட்டோஸ்!
சூரியுடன் சிவகார்த்திகேயன் பைக்கில் செல்லும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பதோடு லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று முதல் பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறன்றன.
சூரி பைக் ஓட்ட பின்னால் சிவகார்த்திகேயன் அமர்ந்திருக்கும் புகைப்படங்களும் வீடியோவும், ஷூட்டிங்கில் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.