அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சிவகார்த்திகேயன்? - ஆதாரத்துடன் வெளியான வீடியோ

Sivakarthikeyan Udhayanidhi Stalin Priyanka Arul Mohan Anirudh Ravichander
1 வாரம் முன்

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது. 

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனன், எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “டான்”. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் மே 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. 

பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

படத்தில் பள்ளி மாணவன், கல்லூரி மாணவன் என சிவகார்த்திகேயன் நடிப்பில் வித்தியாசம் காட்டியுள்ளார். டாக்டர் படத்திற்கு பிறகு பிரியங்கா மோகன் மீண்டும் சிவாவுடன் இணைந்துள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோல் மாநாடு படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக எஸ்ஜே சூர்யா கலக்கல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

ட்ரெய்லரில் டான்ஸராக, பாடலாசிரியராக, கேங்ஸ்டராக ஆகிடவா என ஒவ்வொரு காட்சிக்கும் லைஃப்பில் என்ன ஆகப் போகிறேன் என்பது போல சிவகார்த்திகேயன் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் கடைசி காட்சியில் அரசியல்வாதி ஆகிடவா என சிவகார்த்திகேயன் கேட்க, உடனிருப்பவர்கள் பொய் சொல்ல வேண்டியிருக்கும் என கூறுகிறார். இதனைப் பார்த்த பலரும் சிவகார்த்திகேயனுக்கும் அரசியல் ஆசை வந்து விட்டதா என ரசிகர்கள் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். 


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.