அப்புறம் ரெடியா ? டாக்டர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

sivakarthikeyan Nelsondilpkumar DoctorFromOct9
By Irumporai Sep 18, 2021 11:53 AM GMT
Report

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

படக்குழுவினர் கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்க துவங்கியதால் டாக்டர் படத்தின் ரிலீஸ் கடந்த சில மாதங்களாக தள்ளிப்போனது. இந்த நிலையில் டாக்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில், அந்த தகவலை மறுத்த படக்குழுவினர், படம் நிச்சயமாக திரையரங்கில் தான் வெளியாகும் என உறுதியளித்தனர்.

இந்நிலையில் 'டாக்டர்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி வரும் அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்கில் 'டாக்டர்' படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.