எனக்கு துல்கர் சல்மான் நடிகை தான் வேணும் என அடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan
By Irumporai Mar 15, 2023 08:30 PM GMT
Report

தனது படத்திற்கு இந்த நடிகைதான் வேண்டும் என்று சிவாகார்த்திகேயன் கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இப்போது மிகப்பெரிய வியாபாரமாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.

எனக்கு துல்கர் சல்மான் நடிகை தான் வேணும் என அடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan Likes That He Want Actress

 சாய்பல்லவி விலகல்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் இந்த படத்தின் அறிவிப்பு முன்பே வெளியாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது இந்த படத்தில் இருந்து சாய்பல்லவி விலகி விட்டாராம்.

புதிய நடிகை

ஆனால் சிவகார்த்திகேயன் பிரியங்கா அருள் மோகன் வேண்டாம் என்று கூறிவிட்டாராம். ஏனென்றால் ஏற்கனவே இரண்டு முறை அவருடன் ஜோடி போட்டு விட்டேன், மீண்டும் இதே கூட்டணி அமைந்தால் நன்றாக இருக்காது என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி துல்கர் சல்மான் பட நடிகையை இந்த படத்தில் நடிக்க வைக்குமாறு படக்குழுவிடம் சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்துள்ளார். அதாவது சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் தாக்கூரை இந்த படத்தில் நடிக்க வைக்க கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது