'' அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகத்தில் ஏராளம் '' : கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

sivakarthikeyan kamalhaasan
By Irumporai Jan 15, 2022 02:00 PM GMT
Report

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அந்த புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் "சில வேலைகள் சந்தோசத்தை தரும்; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும்.

ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும் தம்பி சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி.இருவருக்கும் வாழ்த்துக்கள்." என்று தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை அடுத்து அவர் இந்தப் புதிய படத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.