மகன் பெயரில் அர்ச்சனை: பழனி முருகனை தரிசித்த சிவகார்த்திகேயன்
sivakarthikeyan
palani murugan
doctor film
By Fathima
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
டாக்டர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பழனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென படக் குழுவினருடன் பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
மின் இழுவை ரயில் மூலம் மலைக் கோவிலுக்கு சென்ற சிவகார்த்திகேயன் நவபாஷான முருகனை தரிசனம் செய்தார்.
மேலும் தற்போது பிறந்த மகன் பெயரில் அர்ச்சனை செய்து வேண்டுதலையும் நிறைவேற்றினார்.
இதனைதொடர்ந்து அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பு கொடுத்து அபிஷேக பொருட்கள் வழங்கப்பட்டது.