‘’ டேமேஜ் ஆன பீசு நானே ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன் ‘’ : பஞ்சர் ஒட்டிய மாணவியை படிக்க வைத்த சிவகார்த்திக்கேயன்

college sivakarthikeyan thiruvarur helpstudent
By Irumporai Jan 22, 2022 11:52 AM GMT
Report

திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியில் பஞ்சர் கடை வைத்துள்ளார் கண்ணன். இவரின் மகள் தேவசங்கரி . படிக்க ஆசையிருந்தும் வசதியின்மையும், நோய்மை காரணமாகவும் அவரது படிப்பு தடைப்பட்டிருந்தது.

அவர் உடல்நிலையை சரிசெய்ய குடும்பமே தாங்கள் நடத்தும் பஞ்சர் கடையில் வேலை செய்கின்றனர். இந்த நிலையில் பஞ்சர் ஓட்டும் மாணவியை ஊடகம் ஒன்று பேட்டி எடுத்து செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை பார்த்த சிவகார்த்திகேயன் அந்த மாணவியை தொடர்பு கொண்டு ’நீ விரும்பும் படிப்பை நான் படிக்க வைக்கின்றேன், என்ன படிக்க விரும்புகிறா? என்று கேட்டதாகவும் அதற்கு தேவசங்கரி நான் நர்சிங் படிக்க விரும்புகிறேன் என்னை நர்சிங் படிக்க வையுங்கள் என்றும் கூறினாராம்.

‘’  டேமேஜ் ஆன பீசு நானே ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன் ‘’ :  பஞ்சர் ஒட்டிய மாணவியை படிக்க வைத்த சிவகார்த்திக்கேயன் | Sivakarthikeyan Help Of Student To Joined Nursing

இதனையடுத்து நாகப்பட்டினத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் அட்மிஷன் வாங்கி கொடுத்து அனைத்து செலவுகளையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டதாகவும் அந்த மாணவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பொங்கல் தினத்தில் தனது குடும்பத்தினர் அனைவருக்கும் சிவகார்த்திகேயன் புது துணி எடுத்து கொடுத்ததாகவும் அந்த துணியை அணிந்து கொண்டு தாங்கள் பொங்கல் கொண்டாடியதாகவும் கூறிய தேவசங்கரி.

என்னைப் படிக்க வைத்த சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி என்றும் நான் படித்து என்னை போலவே கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வேன் என்றும் கூறியுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.