சூப்பர் சிங்கரில் போட்டியாளராக சிவகார்த்திகேயன் தங்கை? - ஜட்ஜஸுக்கு வந்த மிரட்டல்!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளரான தனது ரசிகையை நேரில் சந்தித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
சூப்பர் சிங்கர்
பிரபல தனியார் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பலதரப்பட்ட பின்னணியிலிருந்து தனித்துவமான பல பாடகர்கள் பங்கேற்றுள்ளனர்.

அந்தவகையில் தன்ஷிரா என்ற கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவரும் பங்கேற்றுள்ளார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்துப் பேச வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.
சிவகார்த்திகேயன்
இதனை அறிந்த சிவகார்த்திகேயன், தன்ஷிராவை நேரில் வரவைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பேசிய சிவகார்த்திகேயன், "இவர் என் சகோதரி பார்த்து மார்க் போடுங்கள் என நிகழ்ச்சியின் ஜட்ஜஸிடம் கேட்டுக்கொண்டார். சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்ததை தன்னால் நம்ப முடியாத தன்ஷிரா, அவரை கண்ணீருடன் கட்டியணைத்துக்கொண்டார்.
திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது IBC Tamil
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan