பிரபல நடிகரை காண கூடிய கூட்டம் - டான் படக்குழுவினருக்கு அபராதம் விதித்த போலீசார்!
பொள்ளாச்சி அருகே சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை காண பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து டான் படக்குழுவினருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டு வருகிறது குறிப்பாக கோவை மாவட்டத்தில் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது . நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருவதோடு அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஆற்றங்கரை பகுதியில் சிவகார்த்திகேயன் நடிக்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற்றது. மேம்பால பகுதியில் நடைபெற்றதால் அங்கு படபிடிப்பபை காண்பதற்காக குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.

பெரும்பாலானவர்கள் முக கவசம், அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் படப்பிடிப்பை காண்பதில் ஆர்வமாக இருந்தனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும் படப்பிடிப்பு குழுவினர் அவ்வழியாக செல்லும் வாகனங்களை அப்பகுதியில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆனைமலை ஆற்றங்கரைப் பகுதியில் வருவாய்த்துறை, காவல் துறையிடம் அனுமதியின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் படப்பிடிப்பு
நடத்தியதை அடுத்து ஆனைமலை வருவாய்த்துறை சார்பில் படப்பிடிப்பு குழுவினருக்கு ரூ 19400 அபராதம் விதிக்கப்பட்டது.