ஓடிடியில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
By Petchi Avudaiappan
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனன், எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “டான்”. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் மே 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
கிட்டதட்ட ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனைப் படைத்துள்ள டான் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் டான் படம் ஜூன் 10 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.