சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு - அதிரடி காட்டி முடித்து வைத்த நீதிபதி

Sivakarthikeyan
By Nandhini Apr 26, 2022 09:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் 'கலக்க போவது யாரு?' நிகழ்ச்சியில் போட்டியாளராக தனது பயணத்தைத் தொடங்கினார்.

இதனையடுத்து, காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியின் போட்டியாளராக, தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நடிகராக காலடி எடுத்து வைத்தார். இன்று தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு திறமைகளை வெளிக்காட்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அந்த வழக்கில் மனுவில்,`மிஸ்டர் லோக்கல்' படத்திற்கு பேசப்பட்ட 15 கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்துள்ளார். மீதம் ரூ.4 கோடியை தரவில்லை.

அந்தத் தொகையை டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்த உத்தரவிட வேண்டும். அவர் சம்பள பாக்கியை தரும் வரை நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களை விநியோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நீதிபதி முன்பு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், சம்பள பாக்கி பிரச்சனைக்கு சமரச தீர்வாளரை நியமித்து தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

மேலும், ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாக உள்ள 3 படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்திருக்கிறார்.   

சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு - அதிரடி காட்டி முடித்து வைத்த நீதிபதி | Sivakarthikeyan Case Highcourt Gnanavelaraja