அண்ணே சங்கத்து வேற ஆள் பாக்கனும் போல : சூரியை கிண்டல் செய்த சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan Soori birthday
By Irumporai Aug 27, 2021 10:19 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் நடிகர் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் சூரி நடிக்கும் படங்களில் நகைச்சுவைக்கு பஞசமிருக்காது என்றே கூறலாம்.

இவர்களின் நடிப்பில் வெளியானமனம் கொத்திப் பறவை,வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை' எனஇவர்கள் நடித்த படங்களில் ரசிகர்களின் சிரிப்பு சத்தத்தால் திரையரங்கே அதிரும்.

   இந்த நிலையில் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை' என்ற படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சூரி 6 பேக்ஸ் உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோவை பகிர்ந்துள்ளார்.

இதற்கு கருத்து தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், எதிர் நீச்சல் அடி என்று ஏற்றுக் கொடி.... ஆள் செமயா இருக்கீங்க. இனிமே ஃபுல்லா ஹீரோ தான். நாங்க சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பாக்கனும் போல. என் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்  என்று குறிப்பிட்டுள்ளார்.