அருண் விஜய்யுடன் நீடித்த சர்ச்சைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி முடித்து வைத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் டுவிட்

Arun Vijay Sivakarthikeyan
By Nandhini May 09, 2022 07:05 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடித்துள்ள ‘டான்’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் படக்குழுவினர் வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் மே 13-ம் தேதி வெளியாகவுள்ளதால், படத்துக்கான விளம்பரப் பணிகளில் படக் குழு தீவிரம் காட்டி வருகிறது.

நடிகர் அருண் விஜய்க்கும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நீண்ட நாட்களாக சண்டை இருந்து வந்ததாக தகவல் பரவி வந்தது.இதை முறியடிக்கும் வகையில், தற்போது சிவகார்த்திகேயன், அருண் விஜய் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி ❤️ஓ மை டாக்கில் உங்கள் நடிப்பை ரசித்தேன்.. தொடருங்கள், உங்கள் படிப்பு மற்றும் நடிப்பு வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.