கொள்ளை அழகில் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா - வைரலாகும் புகைப்படம் - லைக்குகளை அள்ளி தெறிக்கும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடித்துள்ள ‘டான்’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்தக்கார பெண் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கும், ஆர்த்திக்கும் 2-வதாக மகன் பிறந்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன், 18 வருடங்கள் கழித்து என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என்று பதிவிட்டார்.
இந்தப் பதிவைப் பார்த்த இவரது ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கும், ஆர்த்திக்கும் வாழ்த்து மழையில் நனைய வைத்தனர். இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
தற்போது சிவகார்த்திகேயன் தனது மனைவியின் தங்கை சீமந்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
அந்தப் புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா நன்றாக வளர்ந்து, செம்ம கியூட்டாக இருக்கிறாள். இதைப் பார்த்த சிவாவின் ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகின்றனர்.