கண்கலங்கிய குஷ்பூ : திமுக பேச்சாளர் டிஸ்மிஸ்

Kushboo
By Irumporai Jun 19, 2023 04:23 AM GMT
Report

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அண்மையில் கட்சி கூட்டத்தில் பேசுகையில், பாஜக பிரமுகரும், இந்திய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ பற்றி அவதூறு விளைவிக்கும் விதமாக மேடையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்துக்குள்ளனாது.

கண்கலங்கிய குஷ்பு

இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்த குஷ்பூ, பெண்களை பற்றி இப்படி பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது. கலைஞர் கருணாநிதி இருக்கும் போது இப்படிப்பட்ட பேச்சுக்கள் வரவில்லை. ஆனால் இப்போது அந்தமாதிரி பேச்சுக்கள் வருகின்றன.

கண்கலங்கிய குஷ்பூ : திமுக பேச்சாளர் டிஸ்மிஸ் | Sivaji Krishnamurthy Has Been Dismissed Khushboo

இது பெண்களை அவர்கள் அவமானப்படுத்தவில்லை. கலைஞரை அவமானப்படுத்துகின்றனர். யாரையும் நம்பி நான் தமிழகத்திற்கு வரவில்லை. என் திறமையை நம்பி இங்கே வந்தேன் என பேசி கண்கலங்கினார் மகளிர் உரிமை ஆணைய உறுப்பினர் குஷ்பூ.   

நீக்கம் செய்த திமுக

இதனை தொடர்ந்து, திமுக கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், கட்சிக்கு அவப்பெயர் தேடித்தரும் வகையில் செயல்படுத்தவும் கூறி கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பூ, கட்சி ரீதியாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுத்தது ரெம்ப சந்தோசம். இருந்தாலும் இதனை நான் சும்மா விடமாட்டேன். கட்சி நடவடிக்கை எடுத்துவிட்டது என நான் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க மாட்டேன். நிச்சயம் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.