இந்த 2 நடிகர்களை பார்த்து பயந்து நடுங்கிய சிவாஜி... - வெளியான தகவல்...! ஷாக்கான ரசிகர்கள்...!
தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கொடிக்கட்டி பறந்தவர்கள். இவர் நடிகர் திலகம் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இவர் நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. அந்த அளவிற்கு பலவிதமான வேடங்களில் நடித்து அசத்தியவர்.
இந்த 2 நடிகர்களை பார்த்து பயந்த சிவாஜி
தற்போது சிவாஜி குறித்த ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிவாஜி இந்த 2 நடிகர்கள் பார்த்து பயந்துள்ளாராம். அதில் ஒருவர் நடிகை சாவித்ரி. இவரை ஆண் சிவாஜி என்றே ரசிகர்கள் அழைத்தனர். சிவாஜி நடிகர் திலகம் என்றால், சாவித்ரி நடிகையர் திலகம்.
நடிகை சாவித்ரியுடன், சிவாஜி பல படங்களில் நடித்துள்ளார். சிவாஜி சாவித்ரியுடன் நடிக்கும்போது எந்த நேரத்திலும் தன்னையே அவர் நடிப்பில் ஓவர்டேக் செய்துவிடுவார் என்பதால் அவருடன் நடிக்கும்போது மட்டும் எப்போதுமே சிவாஜி கவனமாக இருப்பாராம். இருவரும் சேர்ந்து நடித்த படம் ‘பாசமலர்’.
அதேபோல், சிவாஜி பார்த்து பயந்த இன்னொரு நடிகர் என்றால் அது எம்.ஆர்.ராதாதான். இவர் கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என பல வேடங்களில் நடித்து அசத்தியவர். இவருடன் நடிக்கும்போதும் நடிகர் சிவாஜி மிக எச்சரிக்கையாக இருப்பாராம். ஏனெனில், சிவாஜி அடுக்கடுக்கான வசனங்களை பேசினாலும், திடீரென ஒரு வசனத்தை பேசி ரசிகர்களின் பார்வை அவர் பக்கம் திருப்பி விடுவாராம்.