சிவாஜிக்கு செய்ய வேண்டிய மரியாதையை எந்த அரசும் செய்யவில்லை : கண்கலங்கிய இசைஞானி

Sivaji Ganesan Ilayaraaja
By Irumporai Dec 19, 2022 07:11 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள சிவாஜி கணேசனின் ரசிகர்களை ஒன்று திரட்டி ஒருநாள் முழுவதும் நடிகர் திலகத்தை பற்றி பேச வேண்டும் என்பது தனது ஆசை என்றும் இசைஞானி இளையராஜா தெரிவித்தார்.

 சிவாஜிகணேசன் புத்தகம்

மருது மோகன் எழுதிய சிவாஜி கணேசன் என்னும் நூலின் வெளியீட்டு விழா சென்னை சேத்துபட்டில் நடைபெற்றது , இதில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா. நடிகர் சிவாஜி கணேசனுடனான தனது நினைவுகளை பேசிக்கொண்டிருந்த போது உணர்ச்சி மிகுதியில் கண்கலங்கினார்.

சிவாஜிக்கு செய்ய வேண்டிய மரியாதையை எந்த அரசும் செய்யவில்லை : கண்கலங்கிய இசைஞானி | Sivaji Ganesan Except Me Says Ilayaraaja

தமிழகத்தில் உள்ள சிவாஜி கணேசனின் ரசிகர்களை ஒன்று திரட்டி ஒருநாள் முழுவதும் நடிகர் திலகத்தை பற்றி பேச வேண்டும் என்பது தனது ஆசை என்றும் இசைஞானி இளையராஜா தெரிவித்தார்.

கண்கலங்கிய இளையராஜா

மேலும், சிவாஜி அண்ணனுக்கு குதிரையில் அவர் அமர்ந்திருப்பது போல் வெள்ளி சிலை பரிசளிக்க வேண்டும் என கேட்டார்கள். அதற்கு ரஜினி, கமல் ஆகியோர் இவ்வளவு தொகை கொடுத்ததாக சொன்னார்கள். அதற்கு நான் மொத்த தொகையையும் கொடுத்துவிடுகிறேன்.

யார் பெயரும் அதில் இருக்க கூடாது என கூறி மொத்த தொகையையும் கொடுத்துவிட்டேன். இதை தம்பட்டம் அடிப்பதற்காக சொல்லவில்லை. அவருக்கு திரை உலகில் யாரும் மரியாதை செய்யவில்லை, எந்த அரசும் மரியாதை செய்யவில்லை. தனி மனிதனாக நான் மட்டும் தான் செய்தேன் என தெரிவித்தார்.