சிவகிரி தம்பதி கொலை வழக்கு; 4 பேர் கைது - சிக்கியது எப்படி?
சிவகிரி வயதான தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பதி கொலை
ஈரோடு, சிவகிரியை அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி (72) - பாக்கியம் (63) ஆகியோர், பணம், நகைக்காக கொலை செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து பத்தே முக்கால் பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் செய்தியாளார்களை சந்தித்தார்.
அதில், கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடமிருந்து 10 முக்கால் சவரன் தங்க நகைகளும் மூன்று இருசக்கர வாகனங்கள், கொலையான ராமசாமியின் செல் போன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மர கைப்பிடி மற்றும் கையுறைகள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.
இதற்காக 12 சிறப்பு தனி படைகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் உரையாடல்கள் பல குற்றவாளிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரசலூர் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தகவல் கிடைக்கப்பெற்றது.
4 பேர் கைது
அதனை கொண்டு மேற்படி நபர்களை கண்காணித்து வந்தோம். இவர்கள் மீது வேறு சில வழக்குகளும் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், பல்லடம் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி வழக்கு விசாரணையும் தொடரும். ஏற்கனவே அவர்கள் மீது 2015ல் ஐந்து வழக்குகள் இருந்த நிலையில்,
அதில் ஒன்பது மாத சிறைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், சென்னிமலையில் நடைபெற்ற கொலை வழக்குகளும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது மேற்கொண்ட விசாரணையில் ஆதாரம் கிடைத்தது. அதிலும் கைது செய்ய வாய்ப்புள்ளது.
இவர்களை கஷ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி நீதிமன்றத்தில் பெறப்பட்டதும் விசாரணை துவங்கும். மேலும் துப்பாக்கி சூடு நடத்தும் நடவடிக்கையை நாங்கள் தவிர்த்து, சட்டப்படியான நடவடிக்கையை மட்டுமே எங்களால் எடுக்க முடியும்.
தொடர்ந்து போலீசாரின் கடமையை செய்வோம் என்றும் எழுமாத்தூர் நீதிமன்றத்தில் கொலை குற்றவாளிகளை ஆஜர்படுத்தி வரும் ஜூன் 2025 வரை அவர்களுக்கு நீதிமன்ற காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.