வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள்..! நிவாராண உதவி வேண்டும் என கோரிக்கை..!
சிவகங்கை அருகே மண்பாண்ட தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் வருமானம் இன்றி பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வடக்கு வேளார் தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மண்பாண்ட தொழிலை மட்டுமே நம்பியுள்ள இந்த குடும்பங்கள் தற்போது கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி தவித்து வருகின்றனர். கோடை காலங்களில் மண்பாண்டங்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவது வழக்கம், ஆனால் தற்போது கோடை காலம் தொடங்கியும் விற்பனை செய்யமுடியாமல் ஏராளமான மண்பாண்டங்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் அவர்களது வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், நிவாரண உதவி வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.