அமைச்சரின் பாராட்டை பெற்றவர்..சிவகங்கை மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா?முழு விவரம் இதோ!
சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் சிவகங்கை முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் ஆகும். 1985ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் மக்கள் தொகையில் 26 ஆவது மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மற்றும் தேவகோட்டை ஆகிய இரு வருவாய் கோட்டங்களையும், சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூா் மற்றும் சிங்கம்புணரி ஆகிய ஒன்பது வட்டங்களையும், 521 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராகத் திரு. நரேஷ் குப்தா அவர்கள் பணியாற்றி வந்தார். இதனை தொடர்ந்து 34 மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
மதுசூதன் ரெட்டி ஐ.ஏ.எஸ்
இந்த நிலையில் கடந்த 14/11/2020 அன்று சிவகங்கை மாவட்டத்தின் ஆட்சியராக மதுசூதன் ரெட்டி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். இவர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.இவர் பொறியியல் பட்டப்படிப்பில் முதுகலை படிப்பை முடித்துள்ளார். 2011-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
பின்னர் வேலூர் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும் தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சப்-ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளார்.பின்னர் வருவாய்த் துறையில் நில நிர்வாக ஆணையாளராக 2 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
தற்போது சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறை இணை ஆணையாளராக பணியாற்றியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தின் ஆட்சியராகச் செயல்பட்டு வந்த மதுசூதன் ரெட்டி ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ்
இவருக்குப் பதில் திருமதி. ஆஷா அஜித் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தின் ஆட்சியராக ஆஷா அஜித் 22-05-2023 அன்று நியமிக்கப்பட்டார். கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆஷா அஜித்.
2015 ஜூலை 4-ம் தேதி சிவில் சர்வீசஸ் தேர்வில் 40-வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சப் ஆட்சியர் பணிபுரிந்தார்.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக அவர் நியமிக்கப்பட்டார். பொதுமக்களிடம் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் விற்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.
இதனால்அமைச்சர் மனோ தங்கராஜின் பாராட்டை பெற்றதுடன் மேல்மட்டத்திலும் கவனம் பெற்றார்.அதன்பிறகு சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித்தை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தற்போது சிவகங்கை மாவட்டத்தை மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.