மருத்துவ மாணவர்களை கொடூரமாக குத்தி கொன்ற மர்மநபர்கள் - 2 மகன்களையும் இழந்து தறி அழுத தாய்!

murder death sivagangai 2 medical student
By Anupriyamkumaresan Aug 01, 2021 02:55 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

சிவகங்கை அருகே 2 மருத்துவ மாணவர்களை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ மாணவர்களை கொடூரமாக குத்தி கொன்ற மர்மநபர்கள் - 2 மகன்களையும் இழந்து தறி அழுத தாய்! | Sivagangai 2 Medical Student Murder Mother Cried

சிவகங்கை மாவட்டம் முத்து நகரை சேர்ந்த இருதயராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்களது இரு மகன்களான ஜோசப் மற்றும் கிறிஸ்டோபர் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பு பயின்று வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி ஆன்லைனில் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இருதயராஜுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டை சில மர்மநபர்கள் மதுபோதையில், அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதை கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த மூவரும், அவர்களை தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், மதுபோதையில் மூத்த மகனான கிறிஸ்டோபரை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கிறிஸ்டோபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருதயராஜையும், ஜோசப்பையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக ஜோசப்பும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மருத்துவ மாணவர்களை கொடூரமாக குத்தி கொன்ற மர்மநபர்கள் - 2 மகன்களையும் இழந்து தறி அழுத தாய்! | Sivagangai 2 Medical Student Murder Mother Cried

இரண்டு மகன்களையும் இழந்து அவரது தாய் மருத்துவமனையிலேயே கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 பேரை கைது செய்து, மேலும் தலைமறைவாகியுள்ள இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.