ரயில் முன் பாய்ந்த சிவா திலீபனின் கடைசி பேஸ்புக் பதிவு

By Fathima Mar 19, 2026 05:41 AM GMT
Report

இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தின் போது ரயில் முன் பாய்ந்த மே 17 இயக்க பொறுப்பாளர் சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மார்ச் 11ம் தேதி சென்னை பார்க் ரயில் நிலையத்தில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம் நடந்தது.

இதன்போது இந்திக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி மே 17 இயக்க பொறுப்பாளர் ரயில் முன் பாய்ந்தார்.

ஒருவார காலமாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரயில் முன் பாய்ந்த சிவா திலீபனின் கடைசி பேஸ்புக் பதிவு | Siva Thileepan Facebook Post Viral

இவரது மரணத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர், இந்தி திணிப்பை மதிநுட்பத்தாலும், மனவுறுதியாலும், தமிழ் பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளதாகவும், யாரும் உயிர்த் தியாகம் செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சிவா திலீபனின் கடைசி பேஸ்புக் பதிவில், ”தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு!” என பதிவிட்டுள்ளார்.