மீண்டும் சிக்கலில் சிக்கும் கேடி ராகவன்! பரபரப்பு புகார்
ஆபாச வீடியோ தொடர்பான சர்ச்சையில் சிக்கிய கேடி ராகவன் மீது சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் என்ற அமைப்பு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
ஆபாச வீடியோ வெளியானவுடன் தனது பதவியை ராஜினாமா செய்தார் கேடி ராகவன், இந்நிலையில் அடுத்த சிக்கலாக சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அதில் ராகவன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி ராகவன் ஆகியோர் சிவசங்கர் பாபா கைதாகாமல் தடுத்துவிடலாம் என்று வாக்குறுதி அளித்திருந்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் கூட மூன்று நாட்களில் சிவசங்கர் பாபாவை ஜாமீனில் எடுத்து விடுவோம் என்று இவர்கள் தரப்பு பக்தர்களுக்கு தவறான தகவல்களை தந்து விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.