சிவசங்கர் பாபாபவால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க போலீசார் அறிவுறுத்தல்

Police Case Request Siva Shankar Baba
By Thahir Oct 31, 2021 10:03 AM GMT
Report

சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கவோ, தகவல் தெரிவிக்கவோ விரும்பினால் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'பாலியல் வழக்கு சம்பந்தமாக சிவசங்கர் பாபா உள்ளிட்டவர்கள் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கவோ, தகவல் தெரிவிக்கவோ விரும்பினால் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகனிடம் 9498104461 என்ற செல்போன் எண்ணிலும்,

இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவியிடம் 9498104695 என்ற செல்போன் எண்ணிலும், இன்ஸ்பெக்டர் கோமதியிடம் 9498107303 என்ற செல்போன் எண்ணிலும், இன்ஸ்பெக்டர் வளர்மதியிடம் 9840643610 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.