கண்ணீர் மல்க மனைவிக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்: என்ன காரணம் தெரியுமா?

Actor sivakarthikeyan Blessed with a baby boy
By Petchi Avudaiappan Jul 12, 2021 11:35 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் 2011 ஆம் ஆண்டு ஆர்த்தியைத் திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு 2013 ஆம் ஆண்டு ஆராதனா என்கிற மகள் பிறந்தார்.

இந்நிலையில் தனக்கு மகன் பிறந்துள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி? அம்மாவும் குழந்தையும் நலம்??❤️?" எனக் கூறியுள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.